தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றவும் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பு மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.