தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் கடந்த சில நாட்களாக மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை  ஒட்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.