இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான டிஜிஸ்டிரேஷன் தொடங்கியுள்ளது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா 576 ரூபாய் செலுத்தி PNG க்கு பதிவு செய்துள்ளன. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.