தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.