தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.