தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற மறு மார்க்கத்தில் திங்கள் கிழமை தோறும் காலை 7:45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் அன்றைய தினம் இரவு 8.25 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று  சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புதன் கிழமை தோறும் மாலை 3:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:45 மணிக்கு கொச்சி வேலியை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூன் 5-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கொச்சுவேலியிலிருந்து மறு மார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் மாலை 6:25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10:40 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். மேலும் இந்த ரயில் சேவை ஜூன் 6-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.