தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினர்.

இந்த மாநாட்டை முன்னிட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சமீபத்தில் தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் பேசியதாவது  18 ஆண்டுகள் வேலை செய்த நிர்வாகி ஒருவர் தளபதி விஜயை பார்க்க 2 நாள் விடுமுறை கேட்டிருந்தார் என அவர் தெரிவித்தார்.

விடுமுறை மறுக்கப்பட்டதால், அந்த நிர்வாகி தனது வேலையை விட்டுவிட்டு தளபதியின் நிகழ்வுக்கு வருவதாக முடிவு செய்தார். புஸ்ஸி ஆனந்த் இதை குறிப்பிடும் போது, தவெக கட்சியில் உண்மையான தொண்டர்கள் மட்டுமே உள்ளனர் எனக் கூறினார்.

மேலும் வேலையே போனால் கூட பரவாயில்லை தளபதி விஜயை பார்ப்பது தான் முக்கியம் என்று தொண்டர் ஒருவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார் எனவும் இப்படிப்பட்ட உண்மையான தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் சொன்னது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.