உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கோத்வாலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு 45 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். பொதுவாக பெற்ற தந்தைகள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள்.
ஆனால் பாதுகாக்க வேண்டிய தந்தையே வேலியே பயிரை மேய்ந்தார் போன்ற கதையாக தன்னுடைய 16 வயது மகளை அவர் கடந்த புதன்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அந்த சிறுமி தன் தாயிடம் கூறிய நிலையில் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
