மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் கட்டிட வேலை பார்க்கும் சுப்பிரமணியன் மகன் அழகர்சாமிக்கு(19) இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று நள்ளிரவில் நேரம் மர்ம நபர்கள் அழகர்சாமியின் வீட்டிற்கு வெளியே நின்று வேலைக்கு வா எனக்கூறி அழைத்துள்ளனர். அப்போது அழகர்சாமி கதவை திறந்து வெளியே வந்தார். உடனே மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அழகர்சாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அழகர்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.