பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசாததால் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவர் அதிக ரன்களை வாரி வழங்குவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அர்ஷ்தீப் தனது காதலி சம்ரீன் கவுருடன் அகமதாபாத் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், அர்ஷ்தீப் சிங் எல்லா லக்கேஜ் பைகளையும் தூக்கிக் கொண்டு வர, சம்ரீன் கையில் ஒரு போனை மட்டும் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து செல்வது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
<a href=”http://
Samreen Kaur always hands her stuff to Arshdeep Singh to carry, while she holds nothing but her phone and boarding pass.
What kind of girlfriend does that? At least she should carry her own handbag. Equality?
She’s definitely going to ruin bro’s career. Downfall loading ⌛ pic.twitter.com/DVN8dNUwGq
— Chota Don (@choga_don) May 9, 2026
“>
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “தன் காதலியின் பைகளையும் சுமக்கும் அர்ஷ்தீப், ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் இப்படிச் சுற்றுவது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே பாதிக்கும்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சம்ரீன் கவுர் தனது சொந்த பையை கூட தூக்காமல் அர்ஷ்தீப்பை வேலைக்காரர் போல நடத்துவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒருபுறம் விமர்சனங்கள் குவிந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் இந்த சீசனில் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
