ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. இந்தப் பரபரப்பான சூழலில், சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி இடையிலான உருவ ஒற்றுமையை வைத்து இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இன்று நடந்த முதலமைச்சர் விஜய்  பதவியேற்பு விழாவின் காட்சிகள் இணையத்தில் வெளியாகின. அதில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு அதிகாரி, அப்படியே சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை உரித்து வைத்தது போல் இருந்தார். இதைக் கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர்.

இந்த வேடிக்கையான விவாதத்தில் இணைந்த அஸ்வின், தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில், “கடமை முக்கியம்தான், ஆனால் சிஎஸ்கே vs லக்னோ மோதும் முக்கியமான ஆட்டம் இன்று நடக்கும்போது இது கொஞ்சம் ஓவர். இது பகல் நேர ஆட்டம், எனவே அன்ஷுல் கம்போஜ் சீக்கிரம் ஒரு கேப் (Cab) பிடித்து செப்பாக்கம் மைதானத்திற்கு வந்து சேரு” என கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

அஸ்வினின் இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்திலும் வைரலானது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ கணக்கில், “கவலைப்படாதீர்கள், அன்ஷுல் கம்போஜ் இங்கேதான் (மைதானத்தில்) இருக்கிறார்” என அவர் அணியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

செப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ள முக்கியப் போட்டிக்கு முன்னதாக, அஸ்வின் மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த ஜாலியான உரையாடல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.