“தமிழ்நாட்டில் பல வருஷமா ஆழமா வேரூன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிட்டு இருக்குற போதைப்பொருள் நெட்வொர்க்கை இனிமேல் சும்மா விடமாட்டோம், வேரோடு பிடுங்கி எறிவோம்னு கர்ஜிச்சிருக்கார் முதலமைச்சர் விஜய்!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூன் 9) நடைபெற்ற ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம்-ஒழுங்கு எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. இளைய சமூகத்தை சீரழிக்கும் இந்த ஆபத்தை ஒழிக்க அரசு மிக தீவிரமான ஆக்ஷனில் இறங்கும்’ என அதிரடி உறுதிமொழி கொடுத்துள்ளார் .
தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் கலந்துகொள்ளும் முதல் அரசு விழா இது என்பதால், மேடையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்திலும், உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
