விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடரை 3-0 எனக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி சில அதிரடி மாற்றங்களைச் செய்தது.
தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இன்று நாங்கள் வேண்டுமென்றே 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் களம் இறங்கினோம்.
Suryakumar Yadav said “We purposely played 6 batters today, we wanted to challenge ourselves – for example chasing 180 or 200, as well wanted to see, if we are 2 down or 3 down, we wanted to play all the players who are part of the T20 World Cup”. pic.twitter.com/BCgNcuCi3U
— Johns. (@CricCrazyJohns) January 28, 2026
எங்களை நாங்களே சோதித்துப் பார்க்க விரும்பினோம். குறிப்பாக, 200 ரன்கள் போன்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 2 அல்லது 3 பேர் சீக்கிரம் அவுட்டாகிவிட்டால், மிடில் ஆர்டர் அதை எப்படிச் சமாளிக்கிறது என்பதைப் பார்க்க இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை நெருங்குவதால், அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணி அசத்தினாலும், சேஸிங்கின் போது நெருக்கடியைச் சமாளிக்கும் வீரர்களின் மனநிலையை அறியவே இந்த ‘ரிஸ்க்’ எடுக்கப்பட்டதாம்.
