கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில், வேகமாக வந்த ஒரு லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோர கடையில் மோதி கவிழ்ந்தது. குஜராத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு சென்று கொண்டிருந்த லாரி முதலில் கடையில் மோதி, பின்னர் கவிழ்வது தெரிகிறது. பெரும் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்து ஓட்டுநரை வாகனத்தில் இருந்து வெளியே எடுத்தனர்.

ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. கேரள பதிவு எண் கொண்ட அந்த லாரியால் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறை, சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீராக்கியது. இந்த விபத்து காணொளியாகப் பதிவாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.