டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை மதியம் டிராக்கில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தை நோக்கி ஓடினார். அந்தப் பெண் தண்டவாளத்தில் ஓடுவதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணின் பின்னால் ஓடினர்.

அந்தப் பெண் வர மறுத்ததால் குண்டுகட்டாக அதிகாரிகள் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு வந்தனர். அதன்பின் மெட்ரோ  நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கியதோடு பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தண்டவாளத்தை நோக்கி ஓடினாரா என்பது சரிவர தெரியவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by Amar Raftaar (@amar__raftaar)