பெங்களூருவின் காட்டன்பேட்டை பகுதியில் நடந்த திடீர் விபத்தில், 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டன்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஞ்சாதேவி என்ற பெண், வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மில் சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த சரக்கு வாகனம் திடீரென மோதியது. இந்த விபத்து அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
CCTV Captures Fatal Pickup Van Crash in Bengaluru’s Cottonpet
Bengaluru witnessed a tragic hit-and-run in the Cottonpet area on Friday (September 12), when a runaway pickup van fatally struck 45-year-old Anja Devi.CCTV footage from the locality shows the shocking moment the… pic.twitter.com/6XjDCXKgQO
— Karnataka Portfolio (@karnatakaportf) September 13, 2025
“>
விபத்தில், அஞ்சாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், உடன் இருந்த மற்றொரு பெண் சிறு காயங்களுடன் அதிசயமாக உயிர்தப்பியுள்ளார். விபத்து நேர்ந்த பிறகு, அந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து சாமராஜ்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குத் காரணமான சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
