
சிவகாசி முருகன் காலனியில் திருமலை குமார்(30)- ராஜலட்சுமி(27) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் திருமலை குமார் கோவையில் இருக்கும் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜலட்சுமிக்கு வேற ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது வெளியூரிலிருந்து சிவகாசிக்கு வரும் திருமலை குமார் ராஜலட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த திருமலை குமார் தகாத உறவை கைவிடுமாறு மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த திருமலை குமார் ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் படுகாயமடைந்த ராஜலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமலை குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.