இன்றைய காலகட்டத்தில் வேலைக்கும் , கல்வி பயில்வதற்க்காகவும் உலக அளவில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களோடு அழைத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது புதிதாக படிக்கவும் மாணவர்கள் தங்களுடைய குடும்பத்தினரை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையானது 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. முதுகலை ஆராய்ச்சி மற்றும் அரசு நிதி உதவி பெரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் இங்கிலாந்துக்கு வருகை புரியும் நபர்களுடைய எண்ணிக்கை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கட்டுப்பாடானது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.