தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அனைவருடைய நலனுக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தனியார் டொமைனில் இருந்த www.omcmanpower.tn.gov.in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே வெளிநாடு செல்ல விருப்பமுள்ளவர்கள் புதிய இணையதள முகவரியை பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலை என கூறி பலர் மோசடியில் ஈடுபடுவதால் தமிழக இளைஞர்கள் நம்பி ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.