அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் டிக்கெட் மும்பையில் வெறும் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

இதனையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பையில் 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.