இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு எதுமே இல்லாமல் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க கூடிய வேலையை செய்ய நிறைய பேர் விரும்புகிறார்கள். இருந்தாலும் ஒரு ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலைகளை வேலை செய்துவிட சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம் இருப்பினும் சொந்தமாக தொழில் தொடங்குவது எளிதான காரியம் இல்லை. முதலீடு செய்வதற்கு பெரிய தொகை வேண்டும். ஆனால் வெறும் பத்தாயிரம் ரூபாயில் நல்ல வருமானம் தரும் தொழில் வாய்ப்பு உள்ளது.

போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் திட்டமானது கைகொடுக்கும். இந்த திட்டத்தை 2024 பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அதிக தபால் நிலைய வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தொழிலை தொடங்கலாம். கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பற்றி நல்ல அறிவு இருந்தால் அஞ்சலக கிளையை திறக்க விரும்ப விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பான் கார்டு இருப்பது அவசியம். நீங்கள் உரிமையாளராக ஆவதற்கு தகுதியுடையவராக இருந்தால் உங்கள் பகுதியில் உள்ள பெரிய தபால் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முன்கூட்டியே தபால் அலுவலகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். உங்களுடைய வருமானம் என்பது உரிமையாளரின் கமிஷன் மூலமாக கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட கடிதத்திற்கு மூன்று ரூபாய் கமிஷன் கிடைக்கும். 200 ரூபாய்க்கு மேல் ஒரு மணியார்டருக்கு  ஐந்து ரூபாய் கமிஷனும், தபால் முத்திரைகள் மற்றும் ஸ்டேஷனரி விற்பனைக்கு ஐந்து சதவீத கமிஷனும் கிடைக்கும். முன்பதிவு செய்யப்பட்ட ஸ்பீடு போஸ்ட் மூலமாக இன்னும் அதிக வருமானம் கிடைக்கும். இதில் ஒவ்வொரு மாதமும் 7% முதல்25  சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.