உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில், வெறும் பக்கோடா செய்ததில் ஏற்பட்ட சண்டை ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சித்கர் பகுதியில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் சனிக்கிழமை காலை இந்த விபரீதம் நடந்துள்ளது.
வீட்டில் விரதம் இருந்ததால், மாவைக் கொண்டு பக்கோடா செய்வதில் லட்சுமி என்ற பெண்ணிற்கும், அவருடைய சகோதரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
“யார் செய்வது? எப்படிச் செய்வது?” என்பதில் தொடங்கிய இந்தச் சண்டை, போகப் போக முற்றியுள்ளது. இதில் மிகுந்த ஆத்திரமடைந்த லட்சுமி, யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை (Sulfas) எடுத்து விழுங்கியுள்ளார்.
சிறிது நேரத்திலேயே லட்சுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட, பதறிப்போன குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், நிலைமை மோசமானதால் மீரட் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட அவர், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாய் கூலி வேலை செய்தும், சகோதரன் நொய்டாவில் வேலை பார்த்தும் இந்த 8 பேர் கொண்ட பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளனர். வெறும் வாய்த்தகராறில் ஒரு உயிர் பறிபோனது அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
