
தோனி-கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது டீக்கடைக்கு தோனி மற்றும் கோலியின் பெயர்களை இணைத்து ‘மஹிரத்’ என்று பெயரிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இருவருக்கும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். இருவரும் ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும் ரசிகர்கள் குதூகலம் அடைவதை சமூக வலைதளங்களில் அதிகம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தோனி மற்றும் கோலியின் தீவிர ரசிகரான மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ஒருவர் தனது டீக்கடைக்கு மஹிரத் என்று பெயர் வைத்துள்ளார். இது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது..
முன்னதாக கடந்த 17ஆம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் தோனி-கோலி பேசும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் திறக்கப்பட்ட இந்த டீக்கடை அவர்களின் நட்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
Mahirat Tea Shop in Kolhapur pic.twitter.com/RjgIKdQEyJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 18, 2023