தற்போது மாறிவரும் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவும், வெயில் காலங்களில் உச்சகட்ட வெப்பமும் நிலவுகிறது. இவை இரண்டும் மக்களை பாதிக்க கூடிய அளவில் இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய் நாட்டில் வெட்ட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை கருதி அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜூன் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை ஊழியர்கள் மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மிட் டே பிரேக் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலனுக்காகவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.