உலகளவில் பிரேசில், தாய்லாந்து, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது சிக்கன் குனியா நோய் பரவலானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் மக்கள் தலைவலி, சோர்வு ,வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த நோயினால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பயோடெக் நிறுவனமான வால்நேவா தடுப்பூசி  VLA -1553 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டுக் கொண்டால் மட்டுமே போதுமானது. மிகவும் பாதுகாப்பானது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் 44 ஆயிரத்து 115 இளைஞர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.