
சென்னை மாவட்டம் அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோ ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.