கர்நாடகாவில் இருந்து ஹரியானா பரிதாபாத் பகுதிக்கு நேற்று காலை வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஹரியானாவை சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்வான் ஓட்டி சென்றார். அவருடன் சதீஷ்கரை சேர்ந்த மோனு என்ற உதவியாளரும் லாரியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. லாரியின் உள்ளே இருந்த ஓட்டுனரும் உதவியாளரும் வெளியில் வர முடியாததால் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.