
சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் சிறுமியின் தாய் கௌசல்யா வேலைக்கு சென்று விட்டார். அப்போது ரோஷினியிடம் தான் வேலைக்கு சென்று விட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை முடித்து வைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் ரோஷினி வீட்டு வேலைகள் எதையும் செய்யவில்லை. இதனால் தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தால் தன்னை அடிப்பார் என்று சிறுமி பயந்தாள். உடனே பயந்து போன ரோஷினி தன் தம்பியின் கண்முன்னே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக சங்கர்நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.