அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளையும் சேர்ந்த டாப் விண்வெளி மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பதும், காணாமல் போவதும் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் நாசா மற்றும் அணு ஆய்வு மையங்களைச் சேர்ந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் தங்களின் மொபைல், பர்ஸ் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே வைத்துவிட்டு மாயமாகியுள்ளனர். இந்த விவகாரம் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மறுபுறம், சீனாவிலும் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ஹைப்பர்சோனிக்ஸ் துறையில் சாதனை படைத்த 10-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கார் விபத்து மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். சீன ஊடகங்கள் இவற்றை சாதாரண விபத்துகள் என மழுப்பினாலும், உயிரிழந்தவர்களின் பணி மற்றும் அவர்கள் கையாண்ட ரகசிய திட்டங்களைக் கவனிக்கும்போது இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான இந்த ‘விஞ்ஞானிகள் வேட்டை’ விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
