இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிப்பதை விட ஓலா மற்றும் Uber உள்ளிட்ட டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கின்றனர். வீட்டிலிருந்து மற்ற இடங்களுக்கு பயணிக்க பலரும் இந்த சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் வன்ஷிதா என்ற பெண் ஒருவர் ஊபர் பயணங்களுக்காக மாதம் 16 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவானதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தன்னுடைய வீட்டு வாடகை இன் பாதி பணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியதாக அவருடைய பதிவில் நபர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகவும் அதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.