நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தற்போது பலரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனி நபர்களுக்கான சொத்துக்களுக்கான வீட்டு கடனில் தற்போது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த பட்ஜெட்டில் வீட்டு கடன்களுக்கான வரி செலுத்துவதில் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நடப்பு பட்ஜெட்டில் வரி விலக்கு மேலும் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.