நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலில் சிறு அளவிலான பிரீமியத்தை செலுத்த வேண்டும். அதன்பின் திட்டத்தில் பம்பர் பலன்கள் கிடைக்கும்.

இந்த போஸ்ட் ஆபீஸ் பாலிசியில், ஒரு நபர் ரூபாய்.299 மற்றும் ரூ.399 பிரீமியம் செலுத்தினால் ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெறுவார். வருடந்தோறும் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பித்துக் கொள்வது அவசியம் ஆகும். இதற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதும் அவசியமாகும். பாலிசியின் கீழ் IPD செலவுக்கு ரூ.60 ஆயிரமும், விபத்துக்கு பின் காயம் ஏற்பட்டால் OPD-க்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது.