இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது பலருக்கும் நிறைவேறாத கனவாக இருக்கிறது. நிறைய பேர் வீடு கட்டுவதற்காக வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் வீடு கட்ட வேண்டிய கனவு நினைவாகிறது. ஆனால் வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன் என்பதால் வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வது நல்லது. எனவே ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்குவதற்கு முன்பாக பல்வேறு வங்கிகளுடன் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணக்கிட்டுவிட்டு அதன் பிறகு தான் ‌ கடன் வாங்க வேண்டும்.

அந்த வகையில் சில வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி bank of baroda வங்கியில் 30 வருட காலத்திற்கு கடன் வாங்கினால் ஆண்டிற்கு 8.4% முதல் 10.90% வரை வட்டி செலுத்த வேண்டும். இதேபோன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் 30 வருடத்திற்கு கடன் வாங்கினால் ‌ ஆண்டுக்கு 8.4 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஆண்டுக்கு 8.50 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

இது 30 வருட காலத்திற்கு பொருந்தும். அதன் பிறகு ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஆண்டுக்கு 8.7 சதவீதம் முதல் வட்டியானது தொடங்குகிறது. ஐசிஐசிஐ வங்கியில் 30 வருடங்களுக்கு கடன் வாங்கினால் ஆண்டுக்கு 8.75 சதவீத வட்டி கிடைக்கும். இதனையடுத்து கனரா வங்கியில் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஆண்டுக்கு 8.5% வட்டியும், கோடக் மகேந்திரா வங்கியில் 20 வருடத்திற்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.