நாட்டில் குறைவான சேமிப்பு முதலீட்டைக் கொண்டு தொடங்கக்கூடிய திட்டங்கள் அதிக அளவில் உள்ளன. குறைந்த அளவு முதலீடாக இருந்த போதிலும் அதில் பெறக்கூடிய லாபம் அதிகமாக இருப்பதை மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் வருடத்திற்கு 500 ரூபாய் செலுத்தி நீங்கள் சேமிப்பை தொடங்கலாம். இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு ஆண்டில் டெபாசிட் செய்யலாம். 15 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதிர்ச்சி காலமாகும்.

அதே சமயம் உதிர்வு காலத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் என்ற விகிதத்தில் திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் என்ற விகிதத்தின் படி ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படும். இதில் 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் இடையில் 15 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 62,728 ரூபாய் பலனாக கிடைக்கும். திட்டத்தின் முதிர்வு காலத்தை நீட்டித்து 25 ஆண்டுகள் முடிவில் ரூ.4,12,321 ரூபாய் பயனர்கள் பெறலாம். எனவே குறைந்தபட்ச முதலீடான 500 ரூபாய் செலுத்தி உங்களுடைய சேமிப்பை தொடங்குங்கள்.