இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. ஆனால் சமீபத்திய உயர்வால் அனைத்து வகையான வட்டி விகிதங்கள் மீண்டும் உயரும். வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வட்டி உள்ளிட்டவை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.