கேரள மாநிலத்தில் கடந்த 1992-ம் ஆண்டு என்ற அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 2008-ம் சிபிஐ போலீசார் கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாஸ்திரி செபி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தீர்ப்பு வழங்கினார். அவர் ஒரு பெண் கைதியை வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது சட்ட விரோதமானது என்று கூறினார். மேலும் இது அரசியல் சாசனப் பிரிவு 21-ஐ மீறிய செயல் என்றும் கூறினார்‌