திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தெரசு (65). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று இரவு மூதாட்டி வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இவர் வீட்டின் அருகே உள்ள வீடுகள் நெருக்கம் நெருக்கமாக அமைந்துள்ள நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு மூதாட்டி வீட்டினுள் புழுக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வறண்டாவில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்ட சிலர் நள்ளிரவு நேரம் பார்த்து தூங்கிக் கொண்டிருந்தவர் கழுத்தை அறுத்து அவரிடம் உள்ள நகைளை திருடியுள்ளனர். அவரிடம் இருந்து 2 செயின், 1 ஜோடி தோடு, 1 மூக்குத்தி என அனைத்து நகைகளையும் திருடி சென்று விட்டனர்.

மறுநாள் காலை மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை சோதனை செய்த போது அவர் மூக்கில் ஒரு முக்குத்தி மட்டுமே இருந்தது.

எனவே மூதாட்டியே கொலை செய்து அவர் அணிதிருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடு சென்றது தெரிய வந்தது. பின்பு மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து மூதாட்டி வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது கொலை நடந்த பகுதியில் மோப்பம் பிடித்த மோப்பநாய் மோப்பம் பிடித்துக்கொண்டே அந்த ஊரில் உள்ள கல்லறை மேட்டு பகுதியில் போய் நின்றது. இதனைத் தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.