
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் ஊட்டியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் இந்த இளம்பெண்கள் அனைவரும் சம்பவ நாளில் வேலை முடிந்த பிறகு வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பதை அவர்கள் உணர்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்கள் கூச்சலிடவே காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அந்த இளம் பெண்கள் வசித்து வரும் வீட்டின் அருகே கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இவர்தான் அந்த பெண்களை வீடியோ எடுத்தது தெரிய வந்தது.
இவருக்கு திருமணமான நிலையில் நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே இளம் பெண்களை ஜன்னல் மற்றும் கதவு வழியே நோட்டமிட்ட நிலையில் நேரம் பார்த்து அவர்கள் உடைமாற்றும் போது வீடியோ எடுத்துள்ளார்.
அவரை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் அவரின் செல்போனை பறிமுதல் செய்து வேறு ஏதாவது இதேப்போன்று செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.