
உத்திரபிரதேசம் மாநிலம் பட்டான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் நேற்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த லவ்லேஷ் என்ற 21 வயது வாலிபர் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனக்கு நடந்த கொடுமைகளை வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் சிறுமி அழுதபடியே கூறிய நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.