நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் சீமான் மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கோனேரிக்கோண் கோட்டை மீட்பு  கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் பாதுகாவலர்கள் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது , சீமான் திடீரென கோபம் அடைந்து, உரையை நிறுத்தி மேடையிலிருந்து கீழே இறங்கி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை நோக்கி சென்றார். அந்தக் காட்சி அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“>

சீமானின் இந்த திடீர் நடவடிக்கை கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதனை தங்கள் கைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.