டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாத்தா, பாட்டியை அவர்களின் முதல் சர்வதேசப் பயணமாக லண்டனுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது இதயங்களை வென்று வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நேகி என்ற அந்தப் பெண் தனது தாத்தா, பாட்டிக்கு இந்த இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
மேலும் தங்களின் பேரக்குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் அந்த முதியவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இந்தத் நெகிழ்ச்சியான வீடியோவைக் கண்ட சமூக ஊடகப் பயனர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். பலர் அந்தப் பெண்ணின் அன்பான மற்றும் அக்கறையான செயலைப் பாராட்டியுள்ளனர்.
VIRAL VIDEO | Delhi Woman’s Surprise London Trip For Grandparents Is Melting Hearts Online (WATCH) https://t.co/unOEoM25PL
“>
இணையத்தில் கருத்துத் தெரிவித்த பயனர்கள், “மிகவும் சிந்தனைமிக்க செயல், எனக்கு அழுகையே வந்துவிட்டது, உன்னை எண்ணி பெருமைப்படுகிறேன்” என்றும், “நானும் எனது தாத்தா, பாட்டிக்கு இதுபோன்று செய்ய விரும்புகிறேன்” என்றும் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளனர்.
