கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் (Weightlifting Championship), வெறும் 2.8 வயதே ஆன ராதிகா காடியா என்ற சிறுமி 20 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்று ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் மிரளவைத்துள்ளார். வெறும் 17 கிலோ மட்டுமே உடல் எடை கொண்ட இந்தச் சுட்டிப் பெண், தன்னை விட கூடுதல் எடையுள்ள 20 கிலோவை மிக அசாட்டலாகத் தூக்கி இந்த அசாத்திய சாதனையைப் படைத்துள்ளார். அதே போட்டியில், ராதிகா காடியாவின் மூத்த சகோதரியான 6 வயது சிறுமி ஆர்யாவும் பங்கேற்றுத் தனது அசுர பலத்தைக் காட்டியுள்ளார்.
ஆர்யா, பவர்லிஃப்டிங் (Powerlifting) பிரிவில் போட்டியிட்டு, யாரும் நம்ப முடியாத அளவிற்குச் சுமார் 85 கிலோ எடையைத் தூக்கி அசத்தி, அவரும் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார். விளையாடும் வயதில் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு, அடுத்தடுத்து தங்கப் பதக்கங்களை அள்ளிய இந்த அக்கா – தங்கை இருவரின் அசாத்திய சாதனை மற்றும் அசுர பலம், தற்போது நாடு முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
