ஒரு ஆட்டை சுற்றி விஷப்பாம்பு சுழன்று நின்று தாக்கத் தயார் நிலையில் இருந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவி வருகிறது. ஆட்டின்  அருகே தனது தலை உயர்த்தி நின்ற பாம்பு, எப்போது வேண்டுமானாலும் தாக்கவும் வாய்ப்புள்ளதாக இருந்த நிலையில், அப்பக்கம் வந்த ஒருவர் தைரியமாக நடந்து, ஆட்டை பாம்பிடமிருந்து மீட்டார். அவரின் செயல் வீடியோவாக பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

“>

 

இந்த வீடியோ ஏற்கனவே 13 மில்லியன் பார்வைகளை கடந்து உள்ள நிலையில், பலரும் அந்த மனிதரின் துணிச்சலையும் ஞானத்தையும் புகழ்ந்து வருகின்றனர். பாம்பு தன்னை சுற்றிக் கொள்வதற்குள் ஆடு அசையாததையும், மீட்பாளரின் தெளிவான செயல்பாடையும் பாராட்டிய கருத்துகள் அதிகம் பதிவாகியுள்ளன. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உயிர்களைப் துணிச்சலுடன் பாதுகாக்கும் செயல்கள்  மூலம் மீட்டவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..