புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதல் எதிரொலியாக அங்குள்ள இரண்டு பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விசவாவு தாக்கி பதினைந்து வயது சிறுமி உட்பட 3 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் தனியார்  இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.