தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்த விவரங்களை உழவன் செயலி மூலமாக விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. அதாவது விவசாயிகள் தங்களுடைய கிராமத்தில் பயிர் காப்பீட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் என அனைத்தையும் உழவன் செயலி மூலமாக அறிந்து கொள்ள முடியும். இதில் விவசாயிகள் தங்களுடைய மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு அறிவிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் குறித்த பக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர் மற்றும் இடத்தில் அளவை பதிவு செய்து எளிதில் காப்பீடு செய்து கொள்ள முடியும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.