தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காய்ச்சலின் மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை எனவும் 30 வகையான வைரஸ் காய்ச்சலை கண்டறியும் வசதி நம்மிடம் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், காய்ச்சல் இருந்தால் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. மருத்துவரை அணுகாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் குணப்படுத்தக் கூடியது தான் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.