நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மேலும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் ஒரு வருடத்திற்கு 2000 ரூபாய் நிதி உதவி பெற முடியும். மத்திய பிரதேச அரசு இந்த சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி மத்திய பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக பண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாநில விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரம் ரூபாயாக இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனி விவசாயிகள் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.