இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயன்களின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ரயிலில் பயணிக்கும் போது ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தொடங்கும் வகையில் மென்பொருளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தை ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆன்லைன் சேவையின் மூலமாக ரயில் பயணிகள் ரயிலின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் தங்கள் மொபைல் அல்லது கணினியை பயன்படுத்தி ஆன்லைனில் செல்ல பிராணிகளுக்கான டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். செல்லப் பிராணிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்ட பிறகு நாய் மற்றும் பூனை போன்றவற்றுக்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் அதிகாரம் TTE க்கு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனைப் போலவே குதிரைகள், பசுக்கள் மற்றும் எருமைகள் போன்ற பெரிய வளர்ப்பு விலங்குகளுக்கு முன்பதிவு செய்த பிறகு சரக்கு ரயிலில் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.