அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் ஊதியத்தில் பெரிய உயர்வானது இருக்கும்.

8வது சம்பளம் கமிஷன் வராது எனும் விவாதமானது இதுவரையிலும் நடந்தது. எனினும் தற்போது 7-வது ஊதியக்குழுவின் சமீபத்திய செய்திக்கு பின் அடுத்த ஊதியக்குழுவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் வருடத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும். ஊழியர்களை மகிழ்விக்க அரசு புது ஊதியக்குழுவை அமைக்க வாய்ப்பு உள்ளது.

2024-ம் வருடம் பொதுத்தேர்தலுக்கு முன் புது ஊதியக்குழுவின் தலைவரும் அறிவிக்கப்படலாம். 8-வது ஊதியக்குழு 2024-ம் வருடத்தில் அமைக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அறிவிக்கப்பட்ட ஒன்றரை வருடங்களுக்குள் அது செயல்படுத்தப்படலாம். அப்படி நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும்.