நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது அவசியம். அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது.

இந்த பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களுடைய பிஎப் கணக்கில் இருந்து வீட்டிலிருந்தே பணத்தை மொபைல் மூலம் எடுத்துக் கொள்ள முடியும்.

UMANG செயலியில் பிஎப் சேவைகளைப் பெற,

Google Play Store அல்லது Apple App Store தளத்தில் இருந்து Umang செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர்  செயலியை ஓபன் செய்து உங்கள் ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்த பிறகு சேவைகளின் பட்டியலிலிருந்து ‘EPFO services’ என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் .

அதன் பிறகு ‘Rise Claim’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து உங்கள் UAN எண் மற்றும் OTP நம்பரை உள்ளீட்டு  OTP நம்பர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

நீங்கள் எடுக்க விரும்பும் வகையை தேர்வு செய்து தேவையான விவரங்களை உள்ளிட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

இறுதியாக  உங்கள் கோரிக்கைக்கான ஒப்புகை எண்ணைப் பெறுவீர்கள்.

UMANG செயலி மூலம் கிடைக்கும் சேவைகள்:

பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.

உரிமைகோரலுக்கு விண்ணப்பிக்கலாம்.

KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

பாஸ்புக்கை சரிபார்க்கலாம்.

ஆயுள் சான்றிதழை உருவாக்கலாம்.

பென்சன் பேமெண்ட் ஆர்டரை  பதிவிறக்கம் செய்யலாம்.

புகார்களை பதிவு செய்து கண்காணிக்கலாம்.